வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு: இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்றால் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை (Foreign Medical Graduates Examina tion - FMGE) எழுத வேண்டும். இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர் களுக்கும் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, “வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு நடத்தும் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். அந்த தேர் வில் 10 % பேர்கூட தேர்வு பெறுவதில்லை. வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கு நீட் தேர்வு நடத்துவது நல்லதுதான். அதேநேரத்தில் இந் திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

10 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்