காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் கஞ்சா செடி வளர்த்த காவலாளி கைது

By செய்திப்பிரிவு

வழக்கறுத்தீஸ்வர் கோயில் வளாகத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக தனியார் ஜவுளிக் கடை காவலாளியை விஷ்ணுகாஞ்சி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

காஞ்சிபுரம் நகரத்தில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில், ஆங்காங்கே சிமென்ட் தொட்டியில் பூச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இக்கோயிலின் அருகே உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் சின்னகாஞ்சிபுரம் பூந்தோட்ட தெருவை சேர்ந்த மூர்த்தி(50) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கோயில் வளாகத்தில் பூச்செடி எனக்கூறி 2 கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால், போலீஸார் அவரை கண்காணித்து வந்தனர். அப்போது கோயில் வளாகத்தில் கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விஷ்ணுகாஞ்சி போலீஸார் நேற்று அவரை கைது செய்தனர். கோயிலில், கஞ்சா செடி வளர்க்கப்பட்ட சம்பவம், அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்