தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின்உதவி தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு படிப் பைத் தொடர, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கும் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் தலா ரூ.25 ஆயிரம் வழங்குவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்பின், பயனாளிகள் எண்ணிக்கை 100-ல் இருந்து 200-ஆக உயர்த்தப்பட்டது.

மேலும், 2015-16-ம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவி தொகை பெறும் மாணவர்களின் பெற்றோர் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது இந்நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் நிதியுதவித் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தாலும், தொழிற்கல்வி பயில இயலாத மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களும் தொழிற்கல்வி உதவித்தொகை பெற, மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படுவதற்கான நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகை வழங்கவும், இந்த அரசாணையில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்