அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘குருஷேத்ரா’ தொழில்நுட்ப திருவிழா: ஆளுநர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘குருஷேத்ரா’ தொழில்நுட்ப திருவிழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று தொடங்கி வைத்தார்.

பொறியியல் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க ‘குருஷேத்ரா’ என்ற தொழில்நுட்ப திருவிழா, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 12-வது ஆண்டு ‘குருஷேத்ரா’ திருவிழா நேற்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால், தொழில்நுட்ப கல்வித் துறை ஆணையர் பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேஷன், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் டி.வி.கீதா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறும் விழாவில், தொழில்நுட்பக் கண்காட்சி, பயிலரங்கம், கருத்தரங்கம், நிபுணர்களின் சொற்பொழிவு, வினாடி-வினா என 35-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குருஷேத்ரா விழா நிகழ்ச்சி விவரங்களை www.kurukshetra.org.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

3 mins ago

ஓடிடி களம்

48 mins ago

தமிழகம்

27 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

30 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்