‘ஒரே நாளில் மின் இணைப்பு திட்டம்’: கடந்த 5 மாதத்தில் மட்டும் 2 லட்சம் இணைப்புகள்

By செய்திப்பிரிவு

ஒரே நாளில் மின்இணைப்புக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், கடந்த 5 மாதத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மின்இணைப்பு பெற அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் விரைவாக மின்இணைப்பு வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் இத்திட்டத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் மின்இணைப்பு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ள இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் மின்கம்பம் இருந்தால் அவர்களுக்கு ஒரே நாளில் மின்இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 5 மாதத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்