அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளர் பதவியில் இருந்துஆர்.சின்னசாமி நீக்கம்

By செய்திப்பிரிவு

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்துசின்னசாமி விடுவிக்கப் பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:

புதிய குழு அமைப்பு

அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.சின்னசாமி விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்புக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, பேரவையின் பணிகளை கவனிக்க புதிய குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில் கோவை மாவட்ட முன்னாள் எம்.பி. யு.ஆர்.கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் தாடி ம.ராசு மற்றும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் கா.சங்கரதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொழிற்சங்கத்தினர் முழு ஒத்துழைப்பு தரவேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை, தாடி ம.ராசு மற்றும் சின்னச்சாமி இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஊதிய ஒப்பந்த போராட்டத்தின் போது, அண்ணா தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 mins ago

தமிழகம்

7 mins ago

க்ரைம்

51 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

56 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்