இசையை வளர்ப்பதில் மியூசிக் அகாடமி முன்னுதாரணமான கலை மையம்: தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: மியூசிக் அகாடமியின் 97-வதுஇசை விழாவை, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து சங்கீத கலாநிதி விருதாளருக்கு `இந்து குழுமம்' வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை(ரூ.1 லட்சம், பொன்னாடை, நினைவுப் பரிசு), இந்தாண்டு சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கர்னாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீக்கு அளித்து சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசும்போது, ‘‘புரந்தரதாசர், தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி போன்றஇசை மேதைகள் கர்னாடக இசையில் எண்ணற்ற கீர்த்தனைகளை பாடிஇருக்கின்றனர். இத்தனை செழுமை வாய்ந்த கர்னாடக இசையை, கலைஞர்களை 97 ஆண்டுகளாக கவுரவித்துவரும் மியூசிக் அகாடமி, இசையை வளர்ப்பதில் முன்னுதாரணமான கலை மையம். இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக சென்னையை யுனெஸ்கோ தெரிவு செய்ததில் மியூசிக் அகாடமியின் பங்கு அளப் பரியது’’ என்றார்.

விழாவில் மியூசிக் அகாடமியின் 97-ம் ஆண்டு இதழை தலைமை நீதிபதி வெளியிட முதல் பிரதியை லால்குடி ஜிஜெஆர் கிருஷ்ணனும் 97-ம் ஆண்டு மலரை லால்குடி ஜிஜெஆர் விஜயலஷ்மியும் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றிய மியூசிக் அகாடமியின் தலைவர்என்.முரளி பேசும்போது ‘‘சங்கீத கலாநிதி விருதாளரான பாம்பே ஜெயயின் கச்சேரியும், கருத்தரங்கத்துக்கு அவரின் தலைமையும் இந்தாண்டு இருக்காது. ஆனால் அடுத்துவரும் ஆண்டுகளில் அவரின் இசை நம்மை மகிழ்விக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

சட்டத் துறை நிபுணர்களுக்கும் மியூசிக் அகாடமிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நீதிபதி டி.எல்.வெங்கட்ராம அய்யர் 1944-ல் சங்கீத கலாநிதி விருதைப் பெற்றார்.1951-ல் அவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனார். அதன்பின், 1953-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிஆனார். 1966-ல் மியூசிக் அகாடமியின் தலைவர் பொறுப்பையும் அவர் வகித்தார்" என்றார்.

`தி இந்து' குழுமத்தின் எம்.எஸ்.சுப்புலட்சுமி அறக்கொடை விருதுக்கு தேர்வு செய்ததற்கு பாம்பே ஜெயஸ்ரீ நன்றி தெரிவித்தார்.

மியூசிக் அகாடமியின் செயலர்மீனாட்சி, நிகழ்ச்சியை தொகுத்த ளித்தார். செயலர் ஸ்ரீகாந்த் நன்றியுரை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

13 mins ago

சுற்றுச்சூழல்

23 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்