இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு: எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்

By செய்திப்பிரிவு

பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் மற்றும் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும் என மதுரை காவல் ஆணையரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட சில அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலர் மணி அமுதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் வெ. கனியமுதன், ஆதிதமிழர் பேரவை உட்பட 7 அமைப்புகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை நேற்று சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: நித்யானந்தா பீடத்தில் உள்ள பெண் சீடர் ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசியுள்ளார்.

அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

கனிமொழி எம்.பி.யை தரக்குறைவாகப் பேசிய நித்யானந்தா மடத்தின் உறுப்பினர்கள், அவர்களைப் பேசத் தூண்டிய நித்யானந்தா ஆகியோரை கைது செய்ய வேண்டும்.

சிறுபான்மையின மக்களை இழிவுபடுத்தி பேசும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, அக்கட்சியை சேர்ந்த நெல்லை நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

35 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

43 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

28 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்