ஹஜ் மானியம் ரத்து செய்வதைக் கண்டித்து வரும் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புனித ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 18-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இஸ்லாமிய பெருமக்கள் புனித பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கி வந்த ஹஜ் பயணத்திற்கான மானியத்தை சிறுபான்மை மக்களுக்கு தொல்லையும் சிரமமும் ஏற்படுத்துவதற்;காக வேண்டுமென்றே பழிவாங்கும் உள்நோக்கத்தோடு மோடியின் மத்திய பாஜக அரசு குறிவைத்து இத்தாக்குதலை தொடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை கண்டிக்கிறேன். எப்போதும் போல் தொடர்ந்து ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை வழங்கிட வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பிலும் மற்றும் தமிழக காங்கிரஸ் சிறுபான்மை அணியின் சார்பிலும் 18.1.2018 காலை 10.30 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு தொல்லை தருவதையும், புனித ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்யப்பட்டதையும் கண்டித்து தமிழகம் முழுவது மாவட்ட தலை நகரங்களில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்