பேரிடர் நிவாரண மையங்களுக்கு வழங்க ரூ.1 கோடியில் 100 ஜெனரேட்டர்: சென்னை மாநகராட்சி வாங்குகிறது

By செய்திப்பிரிவு

சென்னையில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது பொதுமக்களை தங்க வைக்கும் நிவாரண மையங்களில் மின்சாரம் வழங்க ரூ.1 கோடியில் 100 ஜெனரேட்டர்களை சென்னை மாநகராட்சி வாங்க உள்ளது.

இயற்கை பேரிடர்களை சமாளிக்க தேவையான பொருட்களை, மாநில பேரிடர் நிதியில் இருந்து சம்பந்தப்பட்ட துறைகள் வாங்கிக் கொள்ளலாம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதுதொடர்பாக அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கடந்த அக்டோபரில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

அதில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் காலங்களில் பொது மக்களைத் தங்க வைக்கும் நிவாரண மையங்கள், பள்ளிகள், கட்டிடங்கள், வெள்ளம் ஏற்படும் காலங்களில் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் இடங்கள், மின் விபத்துகள் ஏற்படும் இடங்களில் தற்காலிக விளக்கு கள் அமைப்பதற்காக 2 கேவி திறன் கொண்ட சிறிய ரக பெட்ரோலால் இயங்கும் ஜெனரேட்டர்களை சம்பந்தப்பட்ட துறைகள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மாநில பேரிடர் நிதியிலிருந்து சென்னை மாநகராட்சி சார்பில் தலா ரூ.1 லட்சம் வீதம், 100 ஜெனரேட்டர்களை ரூ.1 கோடி மதிப்பில் வாங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்