இன்று அபூர்வ சந்திர கிரகணம்

By செய்திப்பிரிவு

152 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ சந்திரகிரணம் இன்று நிகழ உள்ளது. அதை கண்டுகளிக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன் னாள் பொதுச் செயலாளர் சி.ராமலிங்கம் கூறியதாவது:

பவுர்ணமி தினத்தில் (ஜன.31) சூப்பர் நிலா, சிவப்பு நிலா, நீல நிலா வர உள்ளது. இந்த 3 வகையான நிலா அபூர்வமானது. அமெரிக்காவில் சுமார் 152 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று வந்தது. இன்று நிலா பூமிக்கு மிக அருகில் வருவதால் 14 சதவீதம் பெரிதாகத் தெரியும். 30 சதவீதம் கூடுதலாக பிரகாசமாக இருக்கும். எனவே, இந்த நிலாவை சூப் பர் நிலா என அழைக்கின்றனர்.

ஜனவரி 1, 31 என ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி அபூர்வமாக வருவதால் புளூ மூன் அல்லது நீல நிலா என அழைக்கின்றனர். இந்த பவுர்ணமியன்று முழு சந்திர கிரகணமும் நடக்கிறது.

கிரகணத்தின்போது நிலா வெண்மையாக இல்லாமல் சிவப்பு நிறத்தில் தாமிர நிலாவாக அடிவானத்தில் இருந்து எழுந்து வரும். அதனால் சிவப்பு நிலா என்று பெயர்.

முழு சந்திர கிரகணம் இன்று மாலை 6.15 மணி அளவில் தொடங்கி இரவு 7.30 வரை நிகழும். இந்த அபூர்வ நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க லாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அபூர்வ சந்திர கிரகணத்தைப் பார்ப்பதற்காக சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் கடற்கரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு மாலை 6 முதல் இரவு 9 மணி வரை நடக்க உள்ளது. இதேபோல, ராயபுரம் கடற்கரை, அம்பத்தூர், எண்ணூர், மேடவாக்கம் அருகே கோவிலாஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்