சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்ற இளைஞர்களைப் பிடிக்க 4 தனிப்படை; பொதுமக்கள் புகார் அளிக்கலாம்: போக்குவரத்து போலீஸார் தகவல்

By செய்திப்பிரிவு

புத்தாண்டுக்கு மறுநாள் சென்னையில் இரண்டு இடங்களில் சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்ற மோட்டார் பைக் இளைஞர்களைப் பிடிக்க போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

கடந்த புத்தாண்டு இரவு 187 விபத்துகள் நடந்தன. இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் வாட்ஸப், வலைதளங்களில் ஒரு வீடியோ பிரபலமாகி வருகிறது. கடந்த ஜன.2-ம் தேதி அன்று இரவு மெரினா காமராஜர் சாலை மற்றும் காந்தி மண்டபம் படேல் சாலையில் பைக் ரேஸ் இளைஞர்கள் சாலைத் தடுப்புக்கு அமைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளை வெகுதூரம் தீப்பொறி பறக்க இழுத்துச் சென்றனர்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலை, ராஜ்பபவன் படேல் சாலை இரண்டு இடங்களில் இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. வாகனத்தை ஓட்டுபவர்கள் அனைவரும் இளைஞர்கள். இந்த வீடியோ காட்சிகள் விவகாரம் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து அவர்களை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சாலையில் தீப்பொறி பறக்க பேரிகார்டை இழுத்துச் சென்று அட்டகாசம் செய்த பைக் ரேஸ் கும்பலைப் பிடிக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை இயக்குனர் அலுவலகம் இருக்கக் கூடிய பகுதியிலேயே அட்டகாசம் செய்த பைக் ரேஸர்களைப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. போக்குவரத்து சிக்னலில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து பைக் ரேஸ் இளைஞர்களின் உருவத்தையும் வாகன எண்ணையும் போலீஸார் ஓரளவு அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த இளைஞர்களைப் பிடிக்கும் முயற்சியில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துமீறிய பைக் ரேஸ் இளைஞர்கள் பற்றி 9003130103 என்ற போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண் அல்லது 103 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது மட்டுமின்றி, பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்த வீடியோ உள்ளிட்ட எந்த விவரமாக இருந்தாலும் மக்கள் 9003130103 என்கிற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும் போக்குவரத்துக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

29 mins ago

தமிழகம்

31 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்