104 மருத்துவ உதவி திட்டத்தில் மருத்துவர்களுக்கு செல்போன்கள்

By செய்திப்பிரிவு

104 மருத்துவ உதவி திட்டத்தில், சிவகங்கை மாவட்ட மருத்துவர்களை தொடர்பு கொள்ள செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் 104 மருத்துவ உதவி திட்டத்தில், 24 மணிநேரமும் இலவச மருத்துவ தகவல் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் புகார்கள் குறித்தும் தெரிவிக்கலாம். இத்திட்டத்தில் பயனாளிகள் தகவல் பெற தொடர்பு கொள்ளும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், நிலைய மருத்துவர், இணை இயக்குநர், துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உட்பட 76 பேருக்கு செல்போன்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் நாச்சம்மை, இணை இயக்குநர் அகல்யா மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், 104 திட்ட மேலாளர் ஜீவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

20 mins ago

தமிழகம்

10 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

23 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

25 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்