மக்கள் மனநிலையை கணிக்க முடியவில்லை: ராஜேந்திர பாலாஜி

By செய்திப்பிரிவு

மக்கள் மனநிலையை கணிக்க முடியவில்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மல்லியில் அவர் கூறியது: சூலூர் எம்எல்ஏ கனகராஜ் அதிமுகவில் 3 தலைவர்களும் ஒன்றுசேர வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் முடிவுசெய்ய வேண்டும்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். அவரது அரசியல் எப்படி இருக்கும் என்பதை காலம்தான் முடிவு செய்யும். மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கணிக்க முடியவில்லை. அதிமுக என்ற ஆலமரம் உள்ளது. மற்றொருபுறம் திமுக உள்ளது. புதுப்புது இயங்கங்களும் உருவாகியுள்ளன. ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தேர்தல் வந்தால்தான் முடிவு செய்ய முடியும். அனைத்து எம்எல்ஏக்களும் கட்சியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். ஜெயலலிதாவை எதிர்த்த சசிகலா புஷ்பா எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்