சாலைத் தடுப்பான்கள் எப்படி இருக்க வேண்டும்?- உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

 சாலைத் தடுப்பான்களே விபத்துக்கு காரணமாக அமைவதால் அவை எப்படி இருக்க வேண்டும், எங்கு அமைக்க வேண்டும் போன்றவை குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பகுதி முதல் ஒத்தக்கடை பகுதி வரை சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் விபத்துக்கள் ஏற்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் காரணமின்றி வைக்கப்பட்டிருக்கும் சாலைத் தடுப்பான்கள் மற்றும் தேவையான இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததே விபத்துக்கள் அதிகரிக்க காரணம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,விபத்துகளைக் குறைக்கும் நோக்கில்,வேகத்தைக் கட்டுப்படுத்தும்விதமாகவே தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பகல் நேரங்களில் சாலைத் தடுப்பான்கள் (பேரிகார்டுகள்) வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தாலும், இரவு நேரங்களில் அவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால், சாலை தடுப்பான்கள் (பேரிகார்டுகள்) இருப்பது தெரிவதில்லை. விபத்துகள் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். பின்னர் வழக்கின் தீர்ப்பினைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது:

தடுப்பான்கள் வைக்கும் இடங்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஆணையங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் ஆலோசனைப்படியே, அந்தந்த பகுதி மாநகர காவல்துறையினரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் முடிவு செய்ய வேண்டும். தடுப்பான்கள் வைக்கப்பட்டிருப்பது இரவிலும் 100 மீட்டர் தொலைவிலேயே தெரியும் வகையில் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ( orange, fluorescent - red or florescent yellow - green combination)

பெரிய வாகனங்களும், பல அச்சு உடைய வாகனங்களும் சுலபமாக தெரியும். வகையில் போதுமான இடைவெளியில் தடுப்பான்கள் வைக்க வேண்டும். அணைந்து எரியும் விளக்குகள் தடுப்பான்களின் ஒருபுறமும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சிறப்பான தடுப்பான்கள் அமைக்கப்பட வேண்டும்.தேவையற்ற தடுப்பான்களைக் கண்டறிந்து, அகற்றுவது தொடர்பான அந்தந்த பகுதி போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிக விபத்துப் பகுதிகளில் வேகத்தை தடுக்கும் வகையிலான போதிய எச்சரிக்கையுடன்  கூடிய தடுப்பான்களை அமைக்கலாம். பாதசாரிகள் சாலையை கடக்கும் இடங்கள், சாலை சந்திப்புகள் ஆகியவற்றில் விபத்தை தடுக்கும் வகையில் தடுப்பான்கள் அமைக்கலாம். சாலையை இரண்டாக பிரிக்கும் நிரந்தர கட்டுமானம் இல்லாத இடங்களில் போக்குவரத்தை சீராக்குவதற்கு தற்காலிக அடிப்படையில் தடுப்பான்கள் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட பகுதி காவல் துறையினர் முடிவெடுக்கலாம்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விழா காலங்கள், விழாக்கள் ஆகிய நேரங்களில் போக்குவரத்தை சரிசெய்ய தடுப்பான்களை அமைத்துக்கொள்ளலாம். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள், குற்றச் சம்பவங்கள் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றில் தடுப்பான்கள் அமைக்கலாம். மோட்டார் வாகன சட்டம் பிரிவு 370ல் குறிப்பிட்டுள்ளபடி, தடுப்பான்களுக்கு முன்பாக எச்சரிக்கை ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை/ போக்குவரத்து/ காவல்துறையினர் பணியமர்த்தப்பட வேண்டும். கூடுமான கூடுமான இடங்களில் வாகனங்களின் வேகத்தையும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதையும் கண்டறிய வேண்டும். தடுப்பான்கள் வணிகர்களிடமிருந்தும், வணிக நிறுவனங்களிடமிருந்தும் வாங்கப்படுவதால், பெரும்பாலும் விளம்பரங்கள நிறைந்ததாகவே உள்ளது.

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரம் செய்யக் கூடாது, நெடுஞ்சாலைகளில் விளம்பரம் வைக்கக் கூடாது என்ற உத்தரவுகள் உள்ளதன் அடிப்படையில், பொதுமக்களுக்கான உபயோகம் தரும் தகவல்கள் தவிர வேறு விளம்பரங்களை காவல்துறை அனுமதிக்கக் கூடாது.

வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் எவ்வித வாசகங்களும் காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 min ago

விளையாட்டு

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்