தமிழகத்தில் இந்த ஆண்டில் 6,543 பேருக்கு இலவச பசுக்கள்: அமைச்சர் ராதாகிருஷ்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இந்த ஆண்டில் 6,543 பயனாளிகளுக்கு கறவை பசுக்களும் 83,773 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலைகே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கால்நடை பராமரிப்புத் துறை யின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மண்டல இணை இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் துறையின் செயலாளர் கே.கோபால், இயக்குநர் ச.ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் இலவச பசுக்கள் வழங்கும் திட்டத்தில் டிசம்பர் வரை 6,543 பயனாளிகளுக்கு பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்துக்குள் யாருக்கும் விடுபடாமல் பசுக்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பசுக்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும் மருத்துவ உதவிகளை வழங்கவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

அதேபோல வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் டிசம்பர் வரை 83,773 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 3 லட்சத்து 35 ஆயிரத்து 92 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆடுகளுக்கு தேவையான குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் குறிப்பிட்ட காலத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில கோழியின அபிவிருத்தி திட்டத்தில் 199 கறிக்கோழிப் பண்ணைகள், 2,861 நாட்டுக் கோழிப் பண்ணைகளை இந்த நிதியாண்டுக்குள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

கால்நடை நிலையங்கள் மூலம் இதுவரை 1 கோடியே 88 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 87 லட்சம் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 2 கோடியே 47 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

34 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

19 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்