மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர்வதற்கு அரசு டாக்டர்களுக்கான மதிப்பெண் 5% குறைக்க முடிவு: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய அரசு யோசனை

By சி.கண்ணன்

மருத்துவப் பட்டமேற்படிப்பில் சேர்வதற்காக அரசு டாக்டர் களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணை 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

நீட் மதிப்பெண் கணக்கீடு

அதன்படி கடினமான மற்றும் தொலைதூரம், மலைப்பிரதேசங்கள், டிஎன்ஆர் (திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம்) மற்றும் கிராமங்களில் ஓர் ஆண்டு பணியாற்றிய டாக்டர்களுக்கு 10 சதவீதம், இரண்டு ஆண்டுக்கு 20 சதவீதம், மூன்று ஆண்டுக்கு 30 சதவீதம் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை வைத்து, இந்த சதவீத மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்பட்டது.

50 சதவீத இடஒதுக்கீடு

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு டாக்டர்கள் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இறுதி யாக கூடுதல் மதிப்பெண் முறையில் நடந்து முடிந்த கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற் படிப்புகளுக்கான 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை அரசு டாக்டர்கள் கைப்பற்றினர்.

அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் மதிப்பெண்களால், தங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்று தனியார் டாக்டர் கள் குற்றம் சாட்டினர். அரசு டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தமிழக அரசு குழு அமைப்பு

இந்நிலையில் நாடுமுழுவதும் 2018-2019-ம் கல்வி ஆண்டுக் கான மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக் கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 27-ம் தேதியுடன் முடிவடைந்தது. வரும் ஜனவரி 7-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. ஜனவரி 31-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

இதற்கிடையில் மருத்துவப் பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக தமிழக அரசு 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தமிழக மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநர் பி.உமாநாத் தலைமையிலான குழுவில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

5 சதவீதமாக குறைப்பு

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் அரசு டாக்டர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஓர் ஆண்டுக்கு 10 சதவீத மதிப்பெண்ணை, 5 சதவீதமாக குறைக்கலாம் என்ற ஆலோசனையை இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) மத்திய அரசு வழங்கியுள்ளது. மதிப்பெண்ணை 5 சதவீதமாக குறைப்பதற்கும், இந்த குழுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த முடிவை எடுப்பதற்காக மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

26 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

43 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

45 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்