ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஆளுங்கட்சியினரின் பணப் பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது, தேர்தல் அதிகாரி என்ன தவறு செய்துள்ளார் என்பதை கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதனை வலியுறுத்தினார்கள். இன்றுகூட திமுக அமைப்புச் செயலாளர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி புகார் மனு கொடுத்தார். இந்நிலையில், தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆளுங்கட்சியினரின் பணப் பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் விழிப்போடு இருந்து தேர்தலை நடத்துவதற்கு எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்