மாரடைப்புக்கு அடுத்தபடியாக நுரையீரல் அடைப்பு நோயால் அதிக உயிரிழப்புகள்: நெஞ்சக மருத்துவமனை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

உலக அளவில் மாரடைப்புக்கு அடுத்தபடியாக நுரையீரல் அடைப்பு நோய் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 1 லட்சம் பேரில் 3,500 பேர் நுரையீரல் அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சேத்துப்பட்டு நெஞ்சக நோய் மருத்துவமனை இயக்குநர் அ. மகில்மாறன் கூறினார்.

உலக நுரையீரல் அடைப்பு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி ஆகியோர் முகாமைத் தொடங்கிவைத்தனர். நுரையீரல் மருத்துவத் துறைத் தலைவரும், சேத்துப்பட்டு நெஞ்சக நோய் மருத்துவமனை இயக்குநருமான டாக்டர் அ. மகில்மாறன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக் கள் மற்றும் நோயாளிகளுக்கு நுரையீரல் அடைப்பு நோய் குறித்து பரிசோதனை செய்தனர்.

டீன் நாராயணபாபு பேசும்போது, “புகைபிடிப்பதால் நுரையீரல் மட்டுமல்லாது சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. நீங்கள் புகைபிடிக்கும்போது வெளியேறும் புகையை உங்கள் மனைவி, குழந்தைகள் சுவாசிப்பதால் அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள்” என்றார்.

டாக்டர் அ.மகில்மாறன் கூறும்போது, “உலக அளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோயாக மாரடைப்பு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுரையீரல் அடைப்பு நோய் இருக்கிறது. இந்தியாவில் 1 லட்சம் பேரில் 3,500 பேர் நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்