தொற்றுநோய் தடுக்க 106 நடமாடும் மருத்துவ வாகனங்கள்

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் 106 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் வாகனங்களை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:

ஒவ்வொரு சிறப்பு மருத்துவ முகாம் வானங்களிலும் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள். சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக 260 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியுள்ள மற்றும் மழைநீர் வடிந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 102 மருத்துவக் குழுக்கள் செயல்படுகின்றன. குடிநீர் பரிசோதனைக்காக 90 குழுக்கள் இந்த 6 மாவட்டங்களில் செயல்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்