ஐசிஎப் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் 2,501 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு

By செய்திப்பிரிவு

பெரம்பூர் ஐசிஎப் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் மொத்தம் 2,501 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையின்கீழ் 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாடுமுழுவதும் தினமும் சராசரியாக 2.36 கோடி பேர் பயணம் செய்கின்றனர். ரயில்வே-க்கு நவீன பெட்டிகள் தயாரிக்கும் பணிகளில் பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) முக்கியமான தாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் (2018 மார்ச்) மொத்தம் 2,501 ரயில் பெட்டிகளை தயாரிக்க உள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘ரயில்வே வாரியத் தின் அறிவுறுத்தலின்படி, புதிய வகை யான பெட்டிகள் ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் 2,501 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு வகை யான மின்சார, விரைவு ரயில் பெட்டிகள் உள்ளிட்டவை அடங்கும். பாதுகாப்பு வசதிகள் நிறைந்த, அதிர்வு இல்லாமல் செல்லும் எல்எச்பி சொகுசுப் பெட்டிகள் அதிகளவில் தயாரிக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

59 mins ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

28 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்