புதுச்சேரியில் 3 அரசுப் பேருந்துகளுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு: போலீஸார் விசாரணை

புதுச்சேரியில் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 அரசுப்பேருந்துகள் மீது மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.

 புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அரசு கல்லூரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி அரசு பேருந்து பணிமனையில் இடப்பற்றாக்குறை காரணமாக வெங்கட்ட சுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் புதுச்சேரி அரசு பேருந்துகள் நிறுத்து வைப்பது வழக்கம்.

இதனிடையே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பணிமனையில் நிறுத்தி வைக்கப்படிருந்த 3 பேருந்துகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடினர், அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த பணிமனை ஊழியர்கள் தீயணைப்புத்துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 1 பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது மேலும் 2 பேருந்துகள் இருக்கைகள் மற்றும் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலானது . இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடியாகும். பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்கும் பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் பணிமனையில் நிறுத்து வைக்கபட்டிருந்த ஆந்திர பேருந்துக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்