செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்: 2 நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது

By செய்திப்பிரிவு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மற்ற பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுவது போல தங்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று போராட்டம் நடைபெறும் இடத்தில் போதிய குடிநீர், கழிப்பிட வசதி இல்லை என்றும், இதனால் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக, பாஜக சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 90% கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

15 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்