காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பி.அமுதா, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் பல்வேறு துறை அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். தேங்கிய மழைநீரை அகற்றுவது மற்றும் ஏரிகளிலிருந்து வரும் உபரிநீரை, வடிகால் வழியாக வெளியேற்றுவது தொடர்பாகவும். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரியும், தங்கள் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உடனடியாக தீர்வு காண வேண்டிய பிரச்சனைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்தனர். எதிர்காலத்தில் மழையின்போது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்