போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை: வருமான வரித்துறையினர் மீது வழக்கு தொடர தீபா முடிவு

By செய்திப்பிரிவு

போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் மீது வழக்கு தொடர்வேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு வந்த தீபாவை போயஸ் தோட்ட இல்லம் அருகே செல்ல போலீஸார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், கோபமடைந்த தீபா, ‘சட்டப்பூர்வ வாரிசான என்னை அனுமதிக்க வேண்டும்’ என்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேதா நிலையம் தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எனக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் சோதனை நடத்தியுள்ளனர். ஜெயலலிதா சினிமாவில் நடித்து சம்பாதித்த சொத்து போயஸ் இல்ல வீடு. ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சசிகலா குடும்பத்தின் முழு ஒத்துழைப்போடுதான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இங்கு சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் மீது வழக்கு தொடருவேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்