வழக்கை ரத்து செய்ய கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா மனு தாக்கல்

By செய்திப்பிரிவு

கந்துவட்டிக் கொடுமையால் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை கார்டூன் வரைந்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டதற்காக, தன் மீது நெல்லை போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து குடும்பத்தார் அக்டோபர் 23-ம் தேதி தீக்குளித்து பலியாகினர். இது குறித்து அக்.24-ம் தேதி ஒரு கார்டூன் வரைந்து எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில் முதல்வர், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அரை நிர்வாணத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தை பார்ப்பதுபோல சித்தரித்திருந்தேன்.

இந் நிலையில் நெல்லை ஆட்சியர் புகாரின் பேரில், நவ.5-ம் தேதி போலீஸார் என்னை கைது செய்தனர். நான் எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை. என்னைக் கைது செய்தது இயற்கை நீதிக்கு முரணானது. ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரனைக்கு வர உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

35 mins ago

உலகம்

56 mins ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்