அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்படுவது ஏன்?- அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராமச்சந்திரன், அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பிரிவுகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இதற்குப் பதில் அளித்து பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:

ஆங்கில வழிக்கல்விக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் பிள்ளைகள் யாரும் அரசு பள்ளிகளில் படிப்பதில்லை. அவர்களின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வியிலும் படிப்பது கிடையாது.

தனியார் பள்ளிகளைப் போல அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று பெற்றோர் வற்புறுத்துகிறார்கள். தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைக்கு மேல் கோரிக்கைகள் வரப்பெற்றன.

அந்த கோரிக்கைகளின் அடிப்படையில்தான், அரசு பள்ளி களில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

ஆங்கில வழியில்தான் படிக்க வேண்டும் என்று எந்த மாண வரையும் கட்டாயப்படுத்து வது இல்லை. ஆங்கில வழியில் படிக்க விருப்பப்பட்டவர்கள் ஆங்கில வழியில் கற்கலாம். மற்றவர்கள் தாராளமாக தமிழ் வழியில் படிக்கலாம்.

தற்போது அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் மாணவ-மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி கற்று வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்