ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி: தமிழக அரசின் உத்தரவுக்கு வீரமணி வரவேற்பு

By செய்திப்பிரிவு

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அரசே முழு நிதி உதவி அளித்து ஒத்துழைப்பைத் தரவேண்டும் என்று தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது திராவிடர் கழகம் தெரிவித்தது.

இந்நிலையில், முதல்வர் கே.பழனிசாமி, தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் முயற்சி எடுத்து, அவ்விருக்கைக்குத் தேவையான ரூ.10 கோடி அளிக்க முன்வந்தது வரவேற்கப்படவேண்டிய முடிவாகும்.

முன்னோடி சாதனை

மேலும், கீழடி ஆய்வினை தமிழக அரசே மேற்கொள்ளும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அடுத்த கட்ட தொடர் நடவடிக்கைக்கு அதற்குரிய ஆய்வாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, முனைப்புடன் அதை செய்ய வேண்டும்.

திராவிடர்களின் சிந்துவெளி நாகரிகம் எத்தகைய பழமையான உலக வரலாற்றுக்கும் முன்னோடி சாதனை என்பதை உணர்த்தும் மிகப்பெரிய ஆய்வாக அது அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்