அரசுக் கல்லூரியில் அரசியல் தலையீடு?- விண்ணப்பித்த மாணவர்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் அரசியல் தலையீடு உள்ளதாக குற்றம்சாட்டி, விண்ணப்பித்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன் னேரியில் உள்ளது உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரி. 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இக்கல்லூரியில், இளங்கலை முதலாண்டுக்கான 1,100-க்கு மேற்பட்ட இடங்களில், பெரும் பாலான இடங்கள் பூர்த்தி செய்யப் பட்டு, கடந்த பத்து நாட்க ளுக்கு முன் வகுப்புகள் தொடங்கப் பட்டன.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்து, பிறகு மறுதேர்வில் வெற்றியடைந்த வர்கள் உள்ளிட்டவர்களுக்கான கவுன்சிலிங் புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் நடத்தப் படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இச்சூழலில், பெற்றோருடன் மாணவர்கள் புதன்கிழமை காலை கவுன்சிலிங் வந்தனர். இதில் பலர் நீண்ட நேரம் காத்தி ருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், மாணவர்கள் சேர்க் கையில் அரசியல் தலையீடு உள்ளதாக விண்ணப்பித்த மாண வர்கள் குற்றம்சாட்டினர். இதை யடுத்து அவர்களுடன் இணைந்து கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொன் னேரி போலீஸார், போராட்டக் காரர்களை சமாதானப்படுத்தினர். இதனால், அவர்கள் சாலையி லிருந்து கலைந்து சென்றனர்.

பிறகு போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள், கல்லூரி நிர்வாகம் ஆகிய தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில், விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை முந்நூறுக்கும் மேல் உள்ள நிலையில், கல்லூரியில் மிஞ்சிருக்கும் இடங்கள் மிகக் குறைவாக இருப்பது தெரிய வந் துள்ளது. எனவே, ஏழை- எளிய மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படாத சூழல் நிலவும் வகையில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்துக்கு வரு வாய்த் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

க்ரைம்

22 mins ago

தமிழகம்

47 mins ago

உலகம்

39 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

57 mins ago

வாழ்வியல்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்