மெர்சல் படத்தை பிரபலப்படுத்தியதற்காக தமிழிசைக்கு படக்குழு நன்றி சொல்ல வேண்டும்: தினகரன்

By செய்திப்பிரிவு

மெர்சல் படத்தை இந்திய அளவில் பிரபலப்படுத்தியதற்காக தமிழிசைக்கும், ஹெச்.ராஜாவுக்கும்  படக்குழு நன்றி சொல்ல வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்கள் தமிழிசை, ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பாஜக தலைவர்களின் இந்த நடவடிக்கையை  அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்படத்துறையினர் என பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் மெர்சல் விவகாரம் குறித்து, டிடிவி தினகரன் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மெர்சல் ஒரு தமிழ்த் திரைப்படம். அதனை இந்திய அளவில் பிரபலப்படுத்தியதற்காக தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும், ஹெச்.ராஜாவுக்கும் மெர்சல் படக்குழுவினர் நன்றி சொல்ல வேண்டும்.

மக்களைப் பாதிக்கிற விஷயங்களைத்தானே  மெர்சல் படத்தில் பேசியுள்ளார்கள். உங்களுக்கு பிரச்சினை என்றால் படக்குழுவினரை அழைத்து உங்கள் குறைகளை கூறி இருக்க வேண்டும். ஆனால் மிரட்டல் விடுப்பது போன்ற பாஜக தலைவர்களின் செயல்பாடுகள் அரசியல்வாதியாக உள்ள அனைவருக்கும் தலைக்குனிவை உண்டாக்கியுள்ளது" என்று டிடிவி தினகரன் கூறினார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்