ஸ்கோடா எஸ்யுவி `கொடியாக்’ அறிமுகம்

By செய்திப்பிரிவு

சொ

குசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸ்கோடா நிறுவனம் 7 பேர் பயணிக்கும் வகையிலான எஸ்யுவி ரக மாடல் கொடியாக்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிமீயம் எஸ்யுவி-யாக களம் இறக்கப்பட்டுள்ள கொடியாக் மாடல் காரின் விலை ரூ. 34.50 லட்சமாகும்.

இப்பிரிவில் உள்ள டொயோடா பார்சூனர், ஃபோர்டு எண்டேவர், ஃபோக்ஸ்வேகனின் டிகுயான் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இது அறிமுகமாகியுள்ளது. கொடியாக் என்பது அலாஸ்கா பகுதியின் வனப் பகுதியில் காணப்படும் அரிய வகை கரடியின் பெயராகும். இது ஃபோக்ஸ்வாகனின் எம்க்யூபி பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கொடியாக், தற்போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சர்வதேச சந்தையில் 50,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியச் சந்தையில் எஸ்யுவி ரக விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஸ்கோடாவும் சர்வதேச அளவில் பிரபலமான கொடியாக்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்கோடாவின் செடான் பிரிவில் லாரா, சூப்பர்ப் ஆகியன ஏற்கெனவே பிரபலமானவை. ஏற்கெனவே `யேடி’ எனும் பெயரில் எஸ்யுவி-ஐ இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதற்கு போதிய வரவேற்பு இல்லாததை அடுத்து அந்த மாடல் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த கார் 4,687 மி.மீ. நீளமும், 1,882 மி.மீ.அகலமும் கொண்டது. இது எஸ்யுவி மாடலுக்குரிய கம்பீரத்தை அளிப்பதோடு இதன் முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள் அழகிய தோற்றத்தை அளிக்கின்றன. இதில் உள்ள 8 அங்குல தொடுதிரை ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, பின்புறம் வாகனத்தை இயக்கும்போது கேமிரா மூலம் பின்புறத்தை காண வசதி செய்கிறது.

காரின் ஏசி நிலையை கட்டுப்படுத்த 3 அடுக்கு வசதிகள் உள்ளன. இதனால் பயணிகள் தங்களுக்கு வசதியான குளிர் நிலையை தேர்வு செய்ய முடியும். பன்முக செயல்பாடுகளைக் கொண்டதாக இதன் ஸ்டீரிங் வீல் உள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதில் 9 ஏர் பேக்குகள் உள்ளது சிறப்பாகும். நீண்ட தூர பயணத்துக்கேற்ப பின்னிருக்கை பயணிகளுக்கு ஹெட் ரெஸ்ட் வசதி மற்றும் 2 பிளாங்கெட்டுகளுடன் இது வெளிவந்துள்ளது. பண்டிகைக் காலத்தை எதிர்நோக்கி அறிமுகம் செய்யப்டப்ட எஸ்யுவி மாடல் ஸ்கோடா கொடியாக்- இந்திய சாலைகளில் கோலோச்சும் என்றே தோன்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்