பஸ் உற்பத்தியைத் தொடங்கியது ஸ்கானியா

By செய்திப்பிரிவு

சொ

குசு பஸ்கள், டிரக்குகள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஸ்கானியா நிறுவனம் பெங்களூரில் பஸ் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

2015-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது இங்கு பஸ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் நரசபுரா எனும் பகுதியில் அதி நவீன ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 1,000 பஸ்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.

பஸ்கள் மட்டுமின்றி டிரக்குகளையும் இங்கு உற்பத்தி செய்ய ஸ்கானியா திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 2,500 டிரக்குகள் இங்கு உற்பத்தியாகும். இந்த ஆலையில் ரூ.300 கோடியை முதலீடு செய்துள்ளது ஸ்கானியா. இங்கிருந்து ஆசிய நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பஸ்களை ஏற்றுமதி செய்ய ஸ்கானியா திட்டமிட்டுள்ளது. ஆலையின் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த ஆலையில் தற்போது 300 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். விரிவாக்கத்துக்குப் பிறகு பணியாளர்களின் எண்ணிக்கை 800 ஆக உயரும். சூழலுக்கு பாதிப்பில்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியையும் ஸ்கானியா மேற்கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்