வெற்றி மொழி: வில் ரோஜர்ஸ்

By செய்திப்பிரிவு

1879 ஆம் ஆண்டு பிறந்த வில் ரோஜர்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த பல்சுவை நடிகர், நகைச்சுவை கலைஞர், பத்திரிகை கட்டுரையாளர், சமூக ஆர்வலர், மேடை மற்றும் திரைப்பட நடிகர். எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட செய்தித்தாள் கட்டுரைகள் இவரது படைப்புகளில் அடங்கும்.

இவரது காலத்தில் அதிக சம்பளம் பெறும் ஹாலிவுட் திரை நட்சத்திரமாக விளங்கினார். தனது அணுகுமுறையால் உலகின் பிரபலமான நடிகர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒருவராக அறியப்பட்டார். 1935-ம் ஆண்டு வடக்கு அலாஸ்காவில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார்.

மற்றவர்களின் உரிமைகளை அங்கீகரிக்க கற்றுக்கொள்ளும் வரை, ஒருபோதும் நாம் உண்மையான நாகரிகத்தைப் பெறப்போவதில்லை.

உங்களால் முடிந்த சிறந்ததை செய்யுங்கள், வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

நான் நகைச்சுவைகள் எழுதுவதில்லை. அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கவனித்து, அதை செய்திகளாக வெளியிடுகிறேன் அவ்வளவுதான்.

நல்ல தீர்ப்பு அனுபவத்திலிருந்து வருகின்றது, அதிகப்படியான அனுபவம் மோசமான தீர்ப்பிலிருந்தே வருகின்றது.

நீங்கள் வெற்றிகரமாக இருக்கவேண்டுமென்றால், அது எளிதானதே. செய்வதை அறிந்து செய், செய்வதை விரும்பி செய், செய்வதை நம்பிக்கையோடு செய்.

ஒரு மனிதன் இரண்டு வழிகளில் மட்டுமே கற்றுக்கொள்கிறான்; ஒன்று படிப்பதன் மூலமாக, மற்றொன்று புத்திசாலிகளுடன் இணைந்திருப்பதன் மூலமாக.

எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. மக்கள் நகைச்சுவையாளர்களை தீவிரமாகவும், அரசியல்வாதிகளை வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்.

எல்லாமே வேடிக்கைதான், அது வேறு யாருக்கோ நடக்கின்றவரை.

அவரவர் துறையை தவிர, அனைவரும் அறியாமையில் உள்ளனர்.

அரசியல் மிகவும் விலை உயர்ந்ததாக மாறிவிட்டது, அதில் தோல்வியடைவதற்கு கூட நிறைய பணம் தேவைப்படுகின்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்