ஜிவிகே ரெட்டி- மிடாஸ் டச்!

By செய்திப்பிரிவு

கடந்த மாதம் இந்தியத் தொழிலதிபர் கவுதம் அதானியின் சுரங்கத் திட்டத் துக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

ஆனால் மற்றொரு இந்தியத் தொழி லதிபரான ஜிவிகே ரெட்டி குழுமத்துக்கு சுரங்க அனுமதி கிடைத்துவிட்டது. அதுவும் அந்நாட்டு நீதிமன்றமே இதற்கான அனுமதியை அளித்துவிட்டது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கலிலீ படுகையில் சுரங்கம் அமைப்பதற்கான திட்டத்தை ஜிவிகே குழுமம் மேற்கொண் டிருந்தது.

ஆல்ஃபா சுரங்கத் திட்டம் என்ற இத்திட்டத்துக்கு அந்நாட்டு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் இது தொடர்பாக ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இப்பிராந்தியத்தின் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் உயிரி பன்முகத் தன்மை (bio diversity) பாதிக்கப்படும் என்றும் நீதிமன் றத்தில் சுட்டிக் காட்டினர்.

ஆனால் இந்த குற்றச் சாட்டுகளை நீதிமன்றம் நிரா கரித்து சுரங்கப் பணியைத் தொடர்வதற்கான அனுமதி யை அளித்துள்ளது. சுரங்கம் அமைப்பதற்காக அரசு விதித்துள்ள அனைத்து விதி முறைகளையும் நிச்சயம் பின்பற்று வோம் என்று ஜிவிகே குழுமம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட் டிருந்ததை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆல்பா சுரங்கத் திட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி இது அல்ல. இந்தத் திட்டத்தைத் தொடரலாம் என ஏற்கெனவே இரண்டு கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. அந்த வகையில் இது ஹாட்ரிக் வெற்றி என்றே குறிப்பிடலாம். ஆல்பா சுரங்கத் திட்டமானது முற்றிலும் திறந்த வெளி சுரங்கமாகும். இங்கிருந்து 3.20 கோடி டன் நிலக்கரியை ஆண்டுதோறும் வெட்டியெடுக்க முடியும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு இதற்கான வளம் அங்குள்ளது.

இங்கு சுரங்கம் அமைக்கப்படுவதால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு அதாவது கட்டுமானப் பணி உள்ளிட்ட பணிகள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுரங்கப் பணிகள் தொடங்கியவுடன் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிச்சயமாக 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

2011-ம் ஆண்டிலேயே இப்பகுதியில் சோதனை அடிப்படையில் நிலக்கரியை இந்நிறுவனம் வெட்டியெடுத்தது. அப்போது 1.25 லட்சம் டன் நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டது.

இந்த நிலக்கரியை எரித்து சோதித்ததில் அது மிகவும் தரமானதாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது சாம்பல் தன்மை குறைவானதாக இருந்தது தெரியவந்தது.

இப்பிராந்தியத்தில் சுரங்கம் அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்கள் இத்திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

இந்தத் திட்டத்தில் 1,000 கோடி டாலரை ஜிவிகே முதலீடு செய்கிறது. சுரங்கத்திலிருந்து நிலக்கரியைக் கொண்டுவர 500 கி.மீ.தூர ரயில் பாதையும் அமைக்கிறது.

அதானியின் கார்மிகோல் சுரங்கத் திட்டத்துக்கு அப்பகுதி யில் அரிய வகை பாம்பு மற்றும் பல்லியினங்கள் வாழ்வதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஜிவிகே குழுமத்தின் ஆல்பா சுரங்கத் திட்டத்துக்கு நீதிமன்றமே அனுமதி அளித் துள்ளதை என்னவென்று சொல் வது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்