ஜெட் வேகத்தில் செல்லும் கார்

By செய்திப்பிரிவு

ஜெட் வேகத்தில் செல்லும் காரை இங்கிலாந்தைச் சேர்ந்த பொறி யியல் வல்லுநர்கள் உருவாக் கியுள்ளனர்.

8 ஆண்டுகளாக கண்ட கனவு இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. ஆராய்ச்சி, வடிவமைப்பு, வேகம் உள்ளிட்டவற்றை எட்டுவதற்காக பாடுபட்ட அனைத்து முயற்சிகளும் இப்போது கைகூடியுள்ளது.

இந்தக் காரின் குதிரை விசை (ஹார்ஸ் பவர்) 1,35,000. ஆம் இதில் மணிக்கு 1,288 கி.மீ வேகத்தில் செல்ல முடியுமாம். அந்த வேகத்தைக் காட்டும் ஸ்பீடா மீட்டரும் இதில் உள்ளது.

இத்தகைய காரை உருவாக்கும் பணியில் 350 நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழகங்களும் இந்த கார் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இந்தக் காரை லண்டனில் காட்சிக்கு வைத்தபோது 8 ஆயிரம் பேர் இதை ஆச்சர்யத்துடனும், பிரமிப்புடனும் பார்த்துச் சென்றுள்ளனர்.

13.5 மீட்டர் நீளமுடைய இந்த காரில் ஜெட் மற்றும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ரோல்ஸ் ராஸ் இஜே200 ஜெட் இன்ஜின் மற்றும் ஜாகுவார் வி8 சூப்பர்சார்ஜர் இன்ஜினும் இதில் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் 1,35,000 குதிரை திறனை இந்தக் காருக்கு அளித்துள்ளது.

ஃபார்முலா 1 காரில் பயன் படுத்தப்படும் காரின் வேகத்தைக் காட்டிலும் இது 7 மடங்கு அதிகமாகும். காரின் பின்புறத்தில் 2 மீட்டர் நீள பகுதி காரை நிலைநிறுத்த உதவுகிறது. காரின் மேல்பகுதி கார்பன் ஃபைபரால் ஆனது.

காரின் காக்பிட் (டிரைவர் சீட் என்று கூற முடியாதே) பல அடுக்கு கார்பன் இழைகளால் ஆனது. அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தால் இது டிரைவரைக் காக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் டேஷ் போர்டு உள்ளிட்ட அனைத்துமே மின்னணு கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

காரின் அதிகபட்ச வேகமான மணிக்கு 1,609 கிமீ. வேகத்தை 55 விநாடிகளில் எட்டி விட முடியும். 7 தனித்தனியான பிரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. காரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 500 சென்சார்கள் உள்ளன. 7 தீயணைப்பு வாகனங்கள் இந்தக் கார் ஓட்டத்தின் போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

காஸ்ட்ரால், ரோலக்ஸ் நிறுவனங்கள் இந்த காருக்குத் தேவையான உயர் நுட்ப எரிபொருளை வழங்க உள்ளன. ஃபார்முலா 1 கார் பந்தைய வீரர்கள் மற்றும் இங்கிலாந்து ராயல் ராணுவத்தின் நிபுணர்களும் இந்த கார் உருவாக்கத்தில் பங்கேற்றுள் ளனர்.

அடுத்த ஆண்டு ஆப்பிரிக்காவில் மணிக்கு 1,228 கிமீ வேகத்தில் சென்று தற்போதைய உலக சாதனையை முறியடிக்க இந்தக் காரை உருவாக்கிய குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 2017-ல் மணிக்கு 1,000 மைல் அதாவது 1,609 கி.மீ. வேகத்தில் செலுத்த குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ரத்தத்தை உறைய வைக்கும் வேகத்தில் செல்லும் இந்தக் காருக்கு வைத்துள்ள பெயர் பிளட்ஹவுண்ட்.

மிகச் சரியான பெயர்.!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

24 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்