சிறந்த விமான நிலையங்கள்

By செய்திப்பிரிவு

அடிக்கடி உலகம் சுற்றுபவர்களை வியப்பிலாழ்த்தும் விமான நிலையங்கள் இவை. அதிக விமானங்களைக் கையாளுவதில் மட்டுமல்ல, பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் இந்த விமான நிலையங்கள் உலக அளவில் முதல் வரிசையில் உள்ளன.

தினசரி லட்சக்கணக்கான பயணிகளைக் கையாண்டாலும், இந்த விமான நிலையங்கள் பளப்பளப்பு குறையாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கான ஓய்வு வசதிகள், உணவகங்கள் எல்லாமே சர்வதேச தரத்தில், நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக போட்டி போடுகின்றன.

உலக அளவில் விமான நிலையங்களை பட்டியலிடும் அமைப்பான ஏர்போர்ட் கவுன்சில் இண்டர்நேஷனல் ஆண்டுதோறும் சிறந்த விமான நிலையங்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச அளவில் 250 விமான நிலையங்களில் டாப் 8 விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்தவை.

சாங்கி - சிங்கப்பூர்

உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது. உயரமான பகுதியில் அமைந்துள்ள விமான நிலையம் இது. நீச்சல் குளத்துடன் ஓய்வு விடுதிகள், திரையரங்கம் என பல வசதிகளைக் கொண்டுள்ளது. டாப் 10 ஏர்போர்ட் ஓட்டல் விருது பெற்ற கிரோவ்னி பிளாஸா ஓட்டல் இங்கு உள்ளது.

1981 ல் தொடங்கப்பட்ட இந்த விமான நிலையத்தை சிங்கப்பூர் அரசு நிர்வகித்து வருகிறது.

இங்கு 3 முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 5.40 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். 13 கிமீ சுற்றளவு கொண்டது. 1.30 நிமிடத்துக்கு ஒரு விமானம் வந்து இறங்குகிறது.

ஜூரிச் - ஸ்விட்சர்லாந்து

1921ல் தொடங்கப்பட்ட விமான நிலையம். 1947 ஆம் ஆண்டிலேயே ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டுள்ளது. தற்போது 2.5 கோடி மக்கள் ஆண்டுக்கு வந்து செல்கின்றனர்.

3 முனையங்கள் உள்ளன. ஏர்போர்ட் வாசலிலிலேயே ரயில் வசதி உள்ளது. விமான நிலையத்தில் சைக்கிள் வாடகைக்கு கிடைக்கும். இங்குள்ள ஷாப்பிங் மால்களில் பொருட்கள் வாங்கினால் வரிகள் கிடையாது.

ஆண்டுக்கு 2.62 லட்சத்துக்கும் அதிகமான விமானங்கள் வந்து செல்கிறது. தினசரி 718 விமானங்களை கையாளுகிறது இந்த விமான நிலையம்.

இன்சியோன் - தென் கொரியா

தென்கொரியா அரசு நிர்வகிக்கும் இன்சிேயான் விமான நிலையம் கடந்த 10 ஆண்டுகளாகவே உலகின் முதல் நிலை விமான நிலையம் என்கிற இடத்தை தக்க வைத்துள்ளது.

காசினோ, உள் விளையாட்டு அரங்கம் என பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்டுள்ளது விமான நிலையம். மேலும் தென் கொரியாவின் கலாசார அருங்காட்சியகமும் இந்த விமான நிலையத்தில் உள்ளது.

3 முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 4.17 கோடி பயணிகளைக் கையாளுகிறது. ஆண்டுக்கு 5.30 லட்சம் விமானங்களை கையாளுகிறது.

முனீச் - ஜெர்மனி

ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய விமான நிலையம். ஜெர்மனியை பொறுத்தவரை பிராங்பர்ட் விமான நிலையத்துக்கு அடுத்து மிகவும் பரபரப்பான விமான நிலையம் இது. 1939-ல் திறக்கப்பட்டது. 1992-ல் மேம்படுத்தப்பட்டது.

சிறிய அளவிலான கோல்ப் விளையாட்டு மைதானம், 257 அறைகள் கொண்ட மூன்று நட்சத்திர ஓட்டல் உள்பட பல சொகுசு வசதிகள் உள்ளன. சுற்றளவு 15 கிலோமீட்டர்.

2 முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 4 கோடி பயணிகளையும், 3.80 லட்சம் விமானங்களையும் கையாளுகிறது. தினசரி 1,019 விமானங்கள் வந்து செல்கின்றன.

டோக்கியோ - ஜப்பான்

டோக்கியோ ஹனியா சர்வதேச விமான நிலையம் ஜப்பானில் உள்ள முக்கிய வர்த்தகத் தலம். டோக்கியோவிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே உள்ளது.

சுற்றுலா, மற்றும் பிசினஸ் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் இந்த விமான நிலையத்தில் கிடைக்கிறது. பயணிகளுக்கான சேவைகள், பராமரிப்பு மற்றும் ஷாப்பிங் விஷயத்தில் முன்னணியில் உள்ளது. 1931 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

அமெரிக்க வசம் இருந்த இந்த விமான நிலையம் 1952 ல் ஜப்பான் அரசு வசம் வந்தது. 3 முனையங்களுடன் ஆண்டுக்கு 6.2 கோடி பயணிகளை கையாளுகிறது.

ஆண்டுக்கு 7.2 கோடி பயணிகளைக் கையாளுகிறது. உலகின் முக்கியமான பிசினஸ் மையமாகவும் திகழ்கிறது. 12 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. ஆண்டுக்கு 7.3 கோடி மக்கள் வந்து செல்கின்றனர்.

ஹீத்ரு - லண்டன்

5 முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 4,70,000 விமானங்களை கையாளுகிறது. தினசரி 1,290 விமானங்கள் வந்து செல்கின்றன. நியூயார்க், துபாய், பிராங்பர்ட், ஹாங்காங், டப்ளின் போன்ற விமான நிலையங்களை முக்கியமாக இணைக்கிறது.

சிறந்த ஏர்போர்ட்டுக்கான பிசினஸ் டிராவலர்ஸ் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற விமான நிலையம். முன்னணி விமான நிலைய ஹோட்டல்கள் உள்ளது. விமான நிலையத்திலேயே மீட்டிங் ஏற்பாடு செய்யும் வசதிகள் உள்ளன.

ஷிபால் - ஆம்ஸ்டர்டாம்

நெதர்லாந்து நாட்டில் ராணுவ தேவைக்காக 1916ல் ஏற்படுத்தப்பட்ட விமான நிலையம் இது. 1940ல் பயணிகள் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.

இன்று ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையமாக மாறியுள்ளது. 6 ரன்வே உள்ளது ஆண்டுக்கு 5.2 கோடி மக்கள் வந்து செல்கின்றனர். விமான நிலையத்தில் சொகுசு வசதிகள் தவிர அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

தோராயமாக 100 விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றன.

பெய்ஜிங்

சீனாவில் முக்கிய விமான நிலையம். சீன மக்கள் குடியரசு நிர்வகிக்கிறது. ஆண்டுக்கு 7.5 கோடி மக்கள் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். தினசரி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

அடுத்ததாக ஆண்டுக்கு 13 கோடி மக்கள் வந்து செல்லும் விதமாக விரிவுபடுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. ஆண்டுக்கு 5.5 லட்சம் விமானங்கள் வந்து செல்கின்றன. 1958ல் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது.

விமான நிலைய வளாகத்துக்குள் நேரடியாக சூரிய ஒளி வருவது போல கூரைகள் அமைத்துள்ளனர். இதுவே பார்ப்பவர்களை கண்களை கவரும் விதமாக இருக்கிறது. விமான நிலையத்துக்குள் தோட்டம், மினி ரயில் வசதிகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்