முதலீடுகளில் நிரந்தர வருமானம் ஈட்டுவது எப்படி?

By செய்திப்பிரிவு

இப்போது அரசு வேலையாக இருந்தாலும் ஓய்வூதியம் நிச்சயமில்லை என்றாகிவிட்டது. இதனால் ஓய்வுபெறும் முன்பே பிற்காலத்துக்கான சேமிப்பு அல்லது நிரந்தர வருமானம் ஈட்டும் வழியை திட்டமிடுவது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையினர் பணியில் இருக்கும் காலத்திலேயே அதிக அளவில் சேமித்து, அதிலிருந்து ஓய்வு காலத்தில் நிரந்தரமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஈட்டுவதற்கான வழிவகைகளை திட்டமிடுவது மிகவும் அவசியமாகிறது.

பொதுவாக நிரந்தர வருமானத்துக்கு வங்கிகளில் வைப்பு நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையை நம்பியிருப்போர் பலர். ஆனால் சமீப காலமாக வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில் நிரந்தர சேமிப்பு மூலம் குறிப்பிட்ட வருமானத்தை பெறுவதற்கான மாற்று வழிகளை ஆராய வேண்டியது கட்டாயமாகிறது.

தற்போதைய சூழலில் பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பரநிதி (மியூச்சுவல் ஃபண்ட்) திட்டங்களில் முதலீடு செய்வது ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். பணவீக்க அடிப்படையில் வருமானம் இருக்க வேண்டுமானால் நிரந்தர வைப்பு திட்டங்கள் ஒரு போதும் சரியான முதலீடாக இருக்காது. இதைத்தான் கடந்த கால நிகழ்வுகளும் உணர்த்துகின்றன. வட்டி விகித குறைப்பும் எதிர்காலத்தில் இதைத்தான் உணர்த்தும்.

ஓய்வு பெற்றவர்கள் நிரந்தர வருமானத்தை எதிர்நோக்கியிருப்பின் அவர்களுக்கு பங்குச் சந்தை முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள், சரிவிகித நிதி திட்டங்கள் உரிய தீர்வை அளிப்பவையாக இருக்கும்.

உதாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை வங்கியின் நிரந்தர சேமிப்பு கணக்கில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். அதற்கு ரூ.7 லட்சம் வட்டியாகக் கிடைக்கும். அதாவது மாதத்துக்கு ரூ.58 ஆயிரம்வட்டி கிடைக்கும். பணவீக்கம் 5 சதவீதமாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் முதலீடான ரூ.1 கோடியின் மதிப்பிழக்காமல் இருக்க வேண்டுமானால் ஓராண்டு முடிவில் உங்கள் சேமிப்பில் ரூ.1.05 கோடி வைத்திருக்க வேண்டும்.

அப்படியெனில் மொத்த வட்டித் தொகையான ரூ.7 லட்சத்தில் நீங்கள் செலவழிக்கும்பெறும் தொகை ரூ.2 லட்சம் மட்டுமே. அத்தகைய சூழலில் உங்களுக்கு மாதம் ரூ.16,666 மட்டுமே கிடைக்கும். உங்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் கிடைக்க வேண்டுமெனில் நீங்கள் ரூ.3 கோடியை முதலீடு செய்தாக வேண்டும். அப்போது வருமான வரியாக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரத்தை செலுத்த வேண்டியிருக்கும். வட்டியை நீங்கள் பெற்றாலும், பெறாவிட்டாலும் வருமான வரியை செலுத்தியாக வேண்டும்.

நிரந்தர சேமிப்புக் கணக்கிலிருந்து வட்டி பெறும்போது அதற்கு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால்பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுவேறானது. உங்கள் முதலீட்டிலிருந்தே நீங்கள் குறிப்பிட்டதொகையைத் தொடர்ந்து குறித்த கால இடைவெளியில் பெறுவீர்கள். பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்பதால் இதில் சந்தை அபாயம் உள்ளது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

இவற்றில் குறைந்தபட்சம் 7 சதவீதத்துக்கும் மேலான வட்டியே கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பரஸ்பர நிதி திட்ட முதலீடுகள் மூலம் கிடைத்த ஆதாயம் 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை இருந்துள்ளன. இத்தகைய சூழலில் 4 சதவீத வருமானத்தை ஆண்டுதோறும் எடுப்பதுபெரும் பிரச்சினையாக இருக்காது. அவ்விதம் எடுக்கும்போது அதற்கான வருமான வரியும் குறைவாகவே செலுத்தவேண்டியிருக்கும். மாதம் ரூ.50 ஆயிரம் தொகை நிரந்தரமாகபெற வேண்டுமாயின் முதலீட்டுக்கு ரூ.1.5 கோடி இருந்தால் போதுமானது. நிரந்தர சேமிப்புக் கணக்குக்கு தேவைப்படுவதைப் போல ரூ.3 கோடி தேவையில்லை. உங்களுக்கான வரி தொகை 10 சதவீத வரம்புக்குள்தான் இருக்கும்.

பரஸ்பர நிதி திட்ட முதலீடுகளில் வருமான வரி பலன் என்பது உள்ளீடான பலனாகும். உதாரணத்துக்கு பரஸ்பர நிதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். ஓராண்டுக்குப் பிறகு அந்த நிதி திட்ட மதிப்பு ரூ.10.80 லட்சமாக உயர்ந்திருக்கும். கூடுதலாக உள்ள தொகை ரூ.80 ஆயிரத்தை நீங்கள் பெற்றால், நீங்கள் பெறுவது 7.4 சதவீதம் மட்டுமே. எஞ்சிய 92.6 சதவீதத்தை நீங்கள் மறு முதலீடு செய்ததாக கருதப்படும். அவ்விதம் நீங்கள் பெற்ற ரூ.80 ஆயிரத்துக்கு நீங்கள் பெற்ற வருமானம் ரூ.5,926க்கு மட்டுமே வரி கணக்கிடப்படும்.

இதுபோன்று ஆண்டுதோறும் தொடர்ந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து மறு முதலீடு செய்வதன் மூலம் எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்டுவதோடு அதிகபட்ச வரி செலுத்துவதையும் தவிர்க்க முடியும்.

பரஸ்பர நிதி திட்டங்களில் தொடர்ந்து பணத்தை எடுக்கும் வசதி (சிஸ்டமேடிக் வித்டிராயல்) உள்ளது. அத்தகைய நிதித் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 mins ago

சுற்றுச்சூழல்

19 mins ago

இந்தியா

50 mins ago

சினிமா

57 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்