புதுப்பொலிவுடன் கவாசகியின் இசட் 900

By செய்திப்பிரிவு

சாகச விரும்பிகளை இலக்காகக் கொண்டு தயாரிப்புகளை மேற்கொண்டு வரும் கவாசகியின் புதிய வரவு இசட் 900. இது புதிய மாடல் அல்ல. ஏற்கெனவே இசட் 900 புழக்கத்தில் இருந்துவருகிறது.

இந்நிலையில் தற்போதைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவைகையில் சில மாறுதல்களை மேற்கொண்டு மேம்படுத்தப்பட வடிவமாக புதிய இசட் 900 வெளிவர உள்ளது. முந்தைய மாடலின் விலை ரூ.7.7 லட்சம். புதிய இசட் 900-ன் விலை ரூ.8.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்இடி முகப்பு விளக்கு, பின்புற வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருகிறது. பெட்ரோல் டேங்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மிக முக்கிய மேம்பாடாக 4 விதமான ஓட்டு முறைகள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட், ரோடு, ரெயின் மற்றும் ரைடர் ஆகிய நான்கு தேர்வுகள் இப்புதிய இசட் 900-ல் இருக்கும். மழைக்காலங்களில் பயணிப்பதற்கு ரெயின் மோட் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறாக தேவைக்கு ஏற்றால்போல் ஓட்டு முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய இசட் 900 பிஎஸ் 6 விதியின்கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 948 சிசி-யைக் கொண்டு இருக்கும் இதன் இன்ஜின், 125 ஹார்ஸ் பவரை 9,500 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யக் கூடியது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ், கேடிஎம் 790 டுயூக் ஆகிய மாடலுக்கு போட்டியாக புதிய இசட் 900 திகழும் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதத் தொடக்கத்தில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

35 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்