ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - வெற்றி மொழி

By செய்திப்பிரிவு

1879 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியல் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி. தனது மூன்று வயதுவரை சரியாக பேசமுடியாமல் அவதிப்பட்டார். நான்காவது வயதில் தன் தந்தையிடமிருந்து பெற்ற காம்பஸ் ஒன்றே, அவரை அறிவியலை நோக்கி அழைத்துச்சென்றது.

ஐன்ஸ்டீனால் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரின் ஆசிரியர்களே பயந்தார்கள் என்பது வரலாறு. 1905 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்ற ஐன்ஸ்டீன், ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக 1921 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.

# மற்றவர்களைவிட திறமையாக விளையாட வேண்டுமானால் முதலில் விளையாட்டின் விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

# வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.

# அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.

# மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.

# ஒரு விஷயம் ஆழமாக பார்க்கப்படுவதால் மட்டுமே அதனைப்பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.

# புத்தி கூர்மையின் உண்மையான அறிகுறி அறிவு சம்பந்தப்பட்டதல்ல, அது கற்பனைத்திறனுடன் தொடர்புடையது.

# ஒருவரின் அனுபவமே அவரின் ஒட்டுமொத்த அறிவாற்றலின் ஒரே ஆதாரமாக கருதப்படுகிறது.

# ஒரு பிரச்சினை எந்த வழியில் ஏற்பட்டதோ, அதே வழியில் அதற்கான தீர்வைப்பற்றி யோசிக்கும்போது நம்மால் அதை தீர்க்கமுடியாது.

# முட்டாள்களுக்கும் மேதைகளுக்கும் உள்ள வித்தியாசம், மேதைகள் எப்போதும் அவர்களின் எல்லை என்னவென்று அறிந்தவர்கள்.

# தவறுகளே செய்யாத ஒருவன் இருக்கிறானென்றால், அவன் புதிதாக எதையுமே முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்.

# நமது அணுகுமுறையில் உள்ள பலவீனமே, நமது கேரக்டரின் பலவீனமாக மாற்றம் பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

39 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

2 hours ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்