கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் பொலேரோ

By செய்திப்பிரிவு

கம்பீரமான வாகனம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மஹிந்திராவின் தயாரிப்புகள்தான். அதிலும் குறிப்பாக ஸ்கார்பியோ, பொலேரோ மாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. தற்போது பொலேரோ மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்து பொலேரோ பிளஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா.

9 பேர் பயணிக்கும் வகையிலான இந்த கம்பீரமான வாகனத்தில் தற்போது டிரைவர் பகுதியில் ஏர் பேக் வசதி கூடுதல் பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் (டிரைவர் மற்றும் முன்னிருக்கை பயணிக்கு), அதி வேக எச்சரிக்கை உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் புதிதாக டியுவி 300 மாடலில் இடம்பெற்றுள்ள ஸ்டீரிங் சக்கரம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள மாடலில் பொலேரோ எல்எக்ஸ், இஎக்ஸ், எஸ்எல்இ, எஸ்எல்எக்ஸ், இஸட்எல்எக்ஸ் ஆகியன 7 பேர் பயணிக்கும் வகையிலானது. இதில் பல வேரியன்ட்களின் உற்பத்தியை மஹிந்திரா நிறுத்திவிட்டது. தற்போது 9 பேர் பயணிக்கும் வகையில் வர உள்ளது. இதன் விலை ஏற்கெனவே உள்ள மாடலைக் காட்டிலும் ரூ. 50 ஆயிரம் கூடுதலாக இருக்கும் எனத் தெரிகிறது.

இப்புதிய மாடல் பிஎஸ் 6 புகை சான்று விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. அத்துடன் விபத்து சோதனை விதிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் பொலேரோ பிளஸ் தயாராகி வருகிறது. விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்