ஒரே ஆலை இரண்டு பிராண்ட் கார்கள்

தொழிலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதனை உதாரணத்துடன் விளக்குவதுதன் நோக்கமே இந்த கட்டுரை. ஆட்டோமொபைல் துறையில் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும், தனித்தனியாக தொழிற்சாலை, விற்பனை மையங்கள், பணியாளர்கள் என அனைத்தும் தனியாக இருக்கும். ஆனால் ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் ஒரே ஆலையில்தான் கார்கள் தயாராகின்றன. சென்னையை அடுத்த ஒரகடத்தில் இருக்கும் ஆலையில்தான் இரு நிறுவனங்களுக்கும் ஒன்றாக கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ரெனால்ட் நிறுவனம் பிரான்ஸை சேர்ந்தது. நிசான் நிறுவனமோ ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாகுபவை.

இரண்டு நாடுகளின் தொழில்நுட்ப கூட்டில் ஒரே ஆலையில் கார்கள் தயாராவதுதான் சிறப்பம்சமாகும். அஸெம்பிளி லைனில் முதலாவதாக ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காரும், அடுத்ததாக நிஸான் நிறுவனத்தின் ரெடிகோ காரும் அடுத்தடுத்து உற்பத்தி செய்யப்படுகின்றன. சிஎம்எப் (Common Module Family) முறையில் இந்த கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டாக தயாரிப்பதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் செலவுகள் கணிசமாக குறைவதாக ரெனால்ட் நிஸான் தலைமைச் செயல் அதிகாரி காலின் மெக்டொனால்ட் தெரிவித்தார்.

சென்னை ஆலையில் நிஸான் 70 சதவீத பங்கும், ரெனால்ட் 30 சதவீதம் பங்கும் வைத்திருக்கிறது. சென்னை ஆலை கட்டமைக்கும் போதே இரு நிறுவனங்களுக்கு தேவையான கார்களை தயாரிப்பதுதான் திட்டமாகும். சர்வதேச அளவில் நிஸான் நிறுவனத்தில் ரெனால்ட் வசம் 43.4 சதவீத பங்குகள் இருக்கிறது. அதேபோல ரெனால்ட் நிறுவனத்தில் நிஸானுக்கு 15% பங்குகள் இருக்கின்றன. அதனால் இரு நிறுவனங்களுக்கும் சாதகமான வகையில் வாகனங்களை தயாரித்துக்கொள்கின்றன. 1999-ம் ஆண்டு இரு நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஏற்பட்டது.

அதன் பிறகு சென்னை ஆலை உருவாக்கப்பட்டதால் இரு நிறுவன கார்களையும் ஒரே ஆலையில் தயாரிப்பதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே இரு நிறுவனங்களுக்கும் பல்வேறு நாடுகளில் தனித்தனி ஆலைகள் இருந்தாலும், தேவைக்கு ஏற்ப அந்த ஆலைகளை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்கின்றன.


காலின் மெக்டொனால்ட்

எப்படி தயாராகிறது

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சில மாடல் கார்கள் இருக்கின்றன. அதில் பல வகையான வேரியன்ட் இருக்கின்றன. தவிர சென்னையில் தயாரிக்கப்படும் கார்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு விதத்தில் வடிவமைக்க வேண்டி இருக்கும். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவுக்கான கார்களுக்கு ஸ்டியரிங் வீல் வலது பக்கம் இருக்கும்.

ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் கார்களுக்கு இடது பக்க ஸ்டியரிங் அவசியமாகும். தவிர ஐரோப்பாவுக்கு செல்லும் கார்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டி இருக்கும். இதுபோல பல விதமான சவால்கள் இருந்தாலும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ஆலையின் ஆண்டு கார் உற்பத்தி திறன் 4.8 லட்சம். கடந்த நிதி ஆண்டில் 3.17 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டன. முந்தைய 2015-16- நிதி ஆண்டை விட 40 சதவீதம் உற்பத்தி அதிகமாகும். சிக்கல் இல்லாமல் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நேரில் பார்த்தோம். ஒவ்வொரு வாரமும் எவ்வளவு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். அதற்குத் தேவையான உதிரி பாகங்களை வகைப்படுத்தி வரிசைப்படுத்துகிறார்கள்.

அசெம்பிளி லைனில் கார் தயாரிக்கும் பணியில், அசெம்பிளி லைனுக்கு இணையாக, காருக்கு தேவையான உதிரிபாகங்களும் பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு காருக்கும் தேவையான உதிரி பாகங்களை வழங்குவதற்கென பிரத்யேகமாக பணியாளர்கள் இருக்கிறார்கள் என்று ஆலையின் மூத்த பணியாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து நிர்வாக இயக்குநர் காலின் மெக்டொனால்டிடம் உரையாடியதில் இருந்து…

அசெம்பிளி லைனில் அடுத்தடுத்து வெவ்வேறு கார்கள் உற்பத்தியாகின்றன. பணியாளர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்கிறீர்கள்?

பணியாளர்களால் மட்டுமே இது சாத்தியம். முதல் 4 வாரங்களுக்கு பொதுவான பயிற்சி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து 3 வாரங்களுக்கு உற்பத்தி நடக்கும் இடத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு அசெம்பிளி லைனில் பணியமர்த்தப்படுவார்கள். ஒருவேளை அவர்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என்றால் மீண்டும் பயிற்சி வழங்கப்படும். தவிர பணியாளர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மேம்படுத்தப்படும்.

உங்களது உற்பத்தி திறன் 4.8 லட்சம். கடந்த நிதி ஆண்டு ஆண்டு உற்பத்தி 3.17 லட்சம். நடப்பாண்டு எப்படி இருக்கும்?

ஏற்றுமதிக்காக சென்னை ஆலையில் தயாரிக்கப்படும் நிஸான் மைக்ரா உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் வேறு ஆலைகளில் அந்த கார்கள் தயாரிக்கப்படும். அதனால் கடந்த நிதி ஆண்டை விட நடப்பாண்டில் உற்பத்தி குறைவாக இருக்கும். அதே சமயத்தில் நடப்பாண்டின் உற்பத்தி குறித்த குறுகிய கால கணிப்புகளை நாங்கள் அறிவிப்பதில்லை.

ஆனால் 2020-ம் ஆண்டில் எங்களின் உற்பத்தி திறன் 4 லட்சத்துக்கு மேல் இருக்கும். அடுத்தடுத்து புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதால் 4 லட்சம் என்கிற இலக்கைத் தொட முடியும்.

சென்னை ஆலையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கிறதே?

ஆமாம் மிகவும் குறைவுதான். ஆனால் எங்களுக்கு ஆண்/பெண் என்னும் எந்த பேதமும் இல்லை. உற்பத்தி திறன் அதிகரிக்கும் போது பெண்களின் எண்ணிக்கையும் உயரும். நீங்கள் ஆண், பெண் பன்முகத் தன்மையைதான் எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு நாடு, மதம், இனம், மொழி என எந்த பாகுபாடும் இல்லை. அனைத்து தரப்பு மக்களும் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

இன்னும் சில ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறை பெரும் மாற்றத்தை சந்திக்கும் என டோனி செபா (tony seba) என்கிற அமெரிக்கர் கணித்திருக்கிறாரே?

அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக தேவையிருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நாங்கள் முக்கியமான நிறுவனம். எங்களுடைய லீப் பிராண்ட் முக்கியமானது. அந்த வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடுவோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்