மிகச் சிறிய ரோல்ஸ் ராய்ஸ் கார்!

By செய்திப்பிரிவு

ரோல்ஸ் ராய்ஸ் என்றாலே பிரம்மாண்டமான தோற்றத்தோடு சீறிப் பாயும் சொகுசு கார்கள்தான் நம் நினைவுக்கு வரும். இந்த நிறுவனம் இப்போது மிகச் சிறிய காரை உருவாக்கியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ரிச்சர்டு மருத்துவமனைக்காக இந்த சிறிய காரை தயாரித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகும் சிறுவர், சிறுமியர் தங்களது வார்டிலிருந்து அறுவை சிகிச்சை அரங்கிற்கு இந்த காரில் செல்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய ரக காரை ஓட்டிச் செல்வதன் மூலம் அவர்களது மன அழுத்தம் குறை கிறதாம். இதனால் அறுவை சிகிச்சைக் குப் பிறகு அவர்கள் விரைந்து குண மடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது மாடல் காரை இம்மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் கொடுத்து சோதித்து பார்த்துள்ளது. மோலி மாத்யூ மற்றும் ஹரி ராஜ்யகுரு ஆகிய இரு சிறுவர்களும் சிறிய ரக காரை மருத்துவமனைக்குள்ளேயே ஓட்டி மகிழ்ந்தனர்.

இந்த காரை பெஸ்போக் உற்பத்திக் குழு வடிவமைத்துள்ளது. வெள்ளை மற்றும் நீல வண்ணம் கொண்ட இரட்டை வண்ண காராக வந்துள்ளது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. வி12 இன்ஜின் கொண்ட இந்த குட்டி கார் 24 வோல்ட் பேட்டரியில் இயங்குகிறது. சொகுசு கார் தயாரிப்போடு நின்றுவிடாமல், மருத்துவமனையில் சிறுவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக சிறிய ரக காரைத் தயாரித்துள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாராட்டுக்குரியதே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்