அலசல்: யாரை திருப்திப்படுத்துகிறது சிபிஐ?

By செய்திப்பிரிவு

இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்புகளில் முதன்மையானது. முக்கிய குற்றங்களை மட்டுமே விசாரிக்கும் உயர்ந்தபட்ச அமைப்பு. சுயேச்சையாக எவ்வித பாரபட்சமும் இன்றி செயல்பட வேண்டிய அமைப்பு. ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலும் ஆட்சியில் இருப்பவர்களை திருப்திபடுத்த செயல்படும் அமைப்பாக மாறி வருகிறது.

சிபிஐ நேர்மையாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பிய சமீபத்திய சம்பவத்தை பார்க்கலாம்.

கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி, மும்பையிலிருந்து வெளிநாடு செல்வதற்கு புறப்பட்டபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் மீது எல்ஓசி (Look on Circular) இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.

மூன்று மாதங்கள் காத்திருந்த அவர் இம்மாத தொடக்கத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை அணுகி தன் மீதான எல்ஓசி-யை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வழக்கறிஞர் வாயிலாக விண்ணப்பித்தார்.

அப்போது அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முதலாவது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கு, மற்றொன்று டெல்லியைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவன மோசடி வழக்கு. இவை இரண்டிலும் இவருக்கு எப்படி தொடர்பு என்ற விவரத்தை வெளியிடவில்லை.

கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி குறித்து வங்கியாளர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். பனாரஸ் பல்கலையில் பேராசிரியராக இருந்து பின்பு பாங்க் ஆப் பரோடாவில் தனது வங்கி வாழ்க்கையைத் தொடங்கியவர். 2005-ம் ஆண்டிலிருந்து 2007-ம் ஆண்டு வரை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநராகவும், 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர்.

அதன்பிறகு 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பணியாற்றியவர். இந்தியன் வங்கியில் இவர் பணியாற்றிய காலத்தில் தலைமை ஊழல் கண்காணிப்பாளராக காமத் பொறுப்பேற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சக்ரவர்த்தி மாறிய பிறகுதான் காமத் ஓய்வு பெற்றார். அப்போது நடத்தப்பட்ட பிரிவு உபசார விழாவில் சக்ரவர்த்தி எந்த அளவுக்கு நேர்மையாக செயல்

பட்டார் என்று காமத் குறிப்பிட்டார். அதேபோல இந்தியன் வங்கியில் தனது மனைவி செயல்படுத்தி வந்த லாக்கருக்கான கட்டணத்தையும் தவறாமல் செலுத்தியவர் என்று வங்கி பணியாளர்களே குறிப்பிடுகின்றனர்.

விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் 17 வங்கிகளுக்கு தொடர்பு உள்ளது. இதில் சக்ரவர்த்திக்கு மட்டும் எப்படி தனிப்பட்ட பொறுப்பு இருக்க முடியும். யாரை திருப்திபடுத்த சிபிஐ வழக்கு தொடர்ந்திருக்கிறது.

வங்கிகளில் கடன் வழங்கும் விகிதம் குறைந்து வருகிறது. நேர்மையானவர்கள் மீது வழக்குகள் பதிவானால் இனி வரும் காலங்களில் எவருமே கடன் வழங்குவதற்கு அஞ்சுவர். இப்போதுதான் இஸ்ரோ வழக்கில் நம்பி நாராயணன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டு இழப்பீடும் பெற உள்ளனர். ஆட்சியாளர்களை திருப்தி செய்ய வழக்கு பதிவு செய்தால், எதிர்காலத்தில் புலனாய்வு அமைப்பு மீதான நம்பிக்கை, நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் நீர்த்துப் போய்விடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்