கூடுதல் அம்சங்கள்: அதே விலையில் ஹோண்டா சிட்டி

By செய்திப்பிரிவு

செடான் கார்களில் மிகவும் பிரபலமானது ஹோண்டா ‘சிட்டி’. இந்த கார் தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு புதுப் பொலிவோடு வந்துள்ளது.

ஆனால், காரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை இந்நிறுவனம். முந்தைய ரூ. 9.72 லட்சம் முதல் ரூ. 14.07 லட்சம் வரை என அதே விலையை இந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. கடந்த மே 28-ம் தேதிக்குப் பிறகு தயாரான கார்களில் ஸ்பீட் அலாரம் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் 80 கி.மீ. வேகத்துக்கு மேல் சென்றால் இது எச்சரிக்கும். அத்துடன் காரின் வேகம் 120 கி.மீ வேகத்தைத் தொடும்போது தொடர்ந்து சப்தம் எழுப்பத் தொடங்கும்.

இத்துடன் முன்னிருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிவதை உணர்த்தும் வசதியும் (சீட் பெல்ட் ரிமைண்டர்) இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் தயாரிக்கப்படும் கார்களில் சீட்பெல்ட் ரிமைண்டர் இருக்க வேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. அதற்கேற்ப இந்த வசதியை தனது புதிய காரில் ஏற்படுத்தியுள்ளது இந்நிறுவனம். மேலும் டிரைவருக்கு ஏர் பேக் பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது. இதனால் முன்புறத்தில் இரட்டை ஏர்பேக் வசதி கொண்டதாக இது வந்துள்ளது.

2014-ம் ஆண்டிலிருந்து இந்திய சாலைகளில் வலம் வரும் ஹோண்டா சிட்டி கார், 2017-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு வந்தது.

இது 119 ஹெச்பி திறன் கொண்ட 1.5 லிட்டர் இன்ஜினைக் கொண்டது. இதில் 5 ஸ்பீடு மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 17.8 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சொகுசான பயணத்துக்கு சிட்டி மிகச் சிறந்ததாக இருக்கும் என்று நம்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

47 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்