வெற்றி மொழி: கிளின்ட் ஈஸ்ட்வுட்

By செய்திப்பிரிவு

1930-ம் ஆண்டு பிறந்த கிளின்ட் ஈஸ்ட்வுட் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர், இயக்குனர், தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர், முதலீட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தொலைக்காட்சி தொடரில் ஒரு துணை நடிகராக அறிமுகமாகி, திரைப்படங்களின் வாயிலாக பெரும் புகழ் பெற்றவர். இவரது திரைப் பாத்திரங்கள் இவரை ஒரு பண்பாட்டு சின்னமாகப் புகழ்பெறச் செய்தன. வாழ்நாள் சாதனைக்காக இத்தாலிய வெனிஸ் திரைப்பட விழா கோல்டன் லயன் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். 1960-களில் மிக பிரபலமான ஹாலிவுட் நட்சத்திரங்களில் ஒருவராகவும், மதிப்புமிக்க இயக்குனராகவும் புகழப்பட்டவர்.

# உங்கள் முயற்சிகள் மீதும், உங்களின் மீதும் மரியாதை கொண்டிருங்கள்.

# சிலநேரங்களில் சிறந்ததற்கான மாற்றத்தை நீங்கள் காண விரும்பினால், அதற்கான செயல்பாடுகளை உங்கள் சொந்த முயற்சியில் எடுக்க வேண்டும்.

# நீங்கள் நம்பிக்கையை உணர வேண்டும், அப்படியில்லையென்றால் பின்னர் நிறைய விஷயங்கள் உங்களுக்கு எதிராகவே செயல்படும்.

# வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான், வாழ்க்கையிலிருந்து நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.

# சுய மரியாதை சுய ஒழுக்கத்திற்கு வழிவகுக்கிறது.

# முதுமையடைவதிலிருந்து நீங்கள் பின்வாங்கி அதை அனுபவித்தால், வயதாவதும் ஒரு வேடிக்கையான நிகழ்வே.

# நான் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கிறேன், ஏனென்றால் எல்லா நேரமும் நான் ஏதாவது புதியவற்றைக் கற்றுக்கொள்கிறேன்.

# விதி உங்களை வெவ்வேறு திசைகளில் இழுக்கிறது.

# கடவுள் உங்களுக்கு மூளையைக் கொடுத்துள்ளார். அதைக்கொண்டு உங்களால் முடிந்த சிறந்ததை செய்யுங்கள்.

# குழந்தைகள் இயற்கை நடிகர்கள் என்று நான் நினைக்கிறேன்.

# சமூகம் தனக்குத்தானே முரண்பாடானதாக இருக்கிறது.

# உங்கள் சுயத்தை நீங்கள் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

15 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்