இரு சக்கர வாகனம் டெல்லி முதலிடம்

By செய்திப்பிரிவு

ரு சக்கர வாகன விற்பனையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆயிரம் பேருக்கு 556 பேரிடம் இரு சக்கர வாகனங்கள் உள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இங்கு நிமிஷத்துக்கு ஒருவர் ஒரு மோட்டார் சைக்கிளை வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி 1,380 புதிய இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. டெல்லியில் மட்டும் மொத்தம் 1.03 கோடி வாகனங்கள் புழக்கத்தில் உள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகமாகும். இதில் கார், ஜீப் உள்ளிட்டவற்றின் பங்கு 30 சதவீதமாகும். 64 சதவீதம் இருசக்கர வாகனங்களே ஆக்கிரமித்துள்ளன.

டெல்லியில் பதிவு செய்யப்படும் வாகனங்கள் பல பெரும்பாலும் என்சிஆர் பிராந்தியத்தில் இயக்கப்படுகின்றன. அதேபோல என்சிஆர் பிராந்தியத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பலவும் தலைநகரில் இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் வீடுகளில் இருசக்கர வாகன உபயோகம் 28 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே காலகட்டத்தில் கார், ஜீப் ஆகியவற்றின் உபயோகம் 13 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல தலைநகரில் சைக்கிள் உபயோகிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

21 mins ago

உலகம்

44 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்