டீசல் `இக்னிஸ்’ உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு

By செய்திப்பிரிவு

நா

ட்டில் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் ரக மாடலான இக்னிஸ் காரில் டீசல் மாடல் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த காரின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து இக்னிஸ் டீசல் வெர்ஷன் உற்பத்தியை நிறுத்திவிட்டது.

இந்த மாடல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரையில் 72 ஆயிரம் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது மாதம் சராசரியாக 4,500 கார்கள் வரை விற்பனை செய்துள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, அவர்களது தேவைகளுக்கு ஏற்ப கார்களை தயாரித்து அளிப்பதையே மாருதி சுஸுகி வழக்கமாகக் கொண்டுள்ளது. இதில் ஒரு பகுதிதான் இக்னிஸ் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதும் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இக்னிஸ் மாடல் கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரீமியம் விற்பனையகமான நெக்ஸா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டன. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் இன்ஜின் கொண்டவை தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். டீசல் மாடலில் 1.3 லிட்டர் இன்ஜின் கொண்ட கார்களின் உற்பத்தி மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

21 mins ago

விளையாட்டு

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்