பெட்ரோல் வளம் மிக்க சவுதி அரேபியாவில் பேட்டரி கார் பந்தயம்

By செய்திப்பிரிவு

ச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. ஆனால் இங்கு பேட்டரி கார் பந்தயம் முதல் முறையாக நடத்தப்பட உள்ளது. ஃபார்முலா – இ உலக சாம்பியன் பட்டப் போட்டிக்கான கார் பந்தயத்தை நடத்த சவுதி அரேபியா முன்வந்துள்ளது.

இந்தப் போட்டி தலைநகர் ரியாத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளின் அடுத்த சுற்று இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் அரச குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களின் பலனாக முதல் முறையாக சர்வதேச போட்டி ஒன்று அங்கு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இ-ரேஸ் சாம்பியன் போட்டிக்கான முதல் சுற்று ரியாத்தில் நடத்துவதன் மூலம் இதேபோன்று அடுத்தடுத்த போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் எண்ணெய் வளம் குறையும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

எண்ணெய் வளத்தில் கொழிக்கும் சவூதி அரேபியாவிலும் எதிர்கால சிந்தனையோடு பேட்டரி கார் பந்தயம் நடத்துவது ஆரோக்கியமான சூழலுக்கு அஸ்திவாரம் இடுவதாக அமையும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

மேலும்