இந்திய சாலைகளில் டிரையம்ப் டைகர்

By செய்திப்பிரிவு

கு

ரூயிஸ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டிரையம்ப் நிறுவனம் புதிய மாடலான டைகர் 1,200 எக்ஸ்சிஎக்ஸ் மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.17 லட்சமாகும்.

புதிய தலைமுறை டிரையம்ப் டைகர் 800 அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே டைகர் 1,200 அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது 1215 சிசி திறன் கொண்டதாகும். இதன் என்ஜின் 122 நியூட்டன் மீட்டர் மற்றும் 7,600 ஆர்பிஎம் சக்தியை வெளிப்படுத்தக் கூடியது. வழக்கமாக இரட்டை சிலிண்டர் கொண்ட இன்ஜின்தான் இரு சக்கர வாகனங்களில் பிரபலம். ஆனால் இதில் மூன்று சிலிண்டர் கொண்ட இன்ஜின் உள்ளது. இதில் உள்ள சஸ்பென்ஷனை தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம். முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் எடை 10 கிலோ குறைவாகும். ஏபிஎஸ் மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதியும் இதில் உள்ளன.

சாவி தேவைப்படாத இக்னீஷன் வசதி கொண்டது. பிரெம்போ ட்வின் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. எரிபொருள் சிக்கனமானது. இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்