பைக் ரேஸுக்கு தயாராகும் வீராங்கனைகள்!

By செய்திப்பிரிவு

 

மோட்டார் சைக்கிள் பந்தயம் எப்போதுமே ஆண்களுக்கு மட்டுமானதாக இருந்துவிட முடியாது. இப்போது பெண்களும் களமிறங்கி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் டிவிஎஸ் ரேஸிங் எனும் பிரிவை உருவாக்கி அதில் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், வீராங்கனைகளை உருவாக்கி வருகிறது.

ஜூன் மாதம் நடைபெற உள்ள பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு வீராங்கனைகளைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது டிவிஎஸ் ரேஸிங்.

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தவர்களில் 17 வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது டிவிஎஸ் ரேஸிங். முதல் கட்டத் தேர்வு மும்பையில் நடைபெற்றது. இதில் 38 பேர் பங்கேற்றனர். அடுத்த கட்டமாக பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் 37 பேர் பங்கேற்றனர்.

இறுதி தேர்வுக்கு 40 பேர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் போட்டி நடைபெற்றது. மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டித் தேர்வில் வீராங்கனைகள் பந்தய தூரத்தைக் கடந்த நேரத்தின் அடிப்படையில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் பங்கேற்ற அனைவரும் டிவிஎஸ் அபாச்சே ஆர்டிஆர் 200 மோட்டார் சைக்கிளை உபயோகித்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடினமான பயிற்சி, உடல் திறன் பயிற்சி அளிக்கப்படும். தேசிய மோட்டார் சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் 2018 போட்டியில் பங்கேற்க தயார்படுத்தப்படுவார்கள்.

2016-ம் ஆண்டு அனைத்து மகளிர் ரேஸிங் அகாடமியை தொடங்கியதாக டிவிஎஸ் ரேஸிங் குழு மேலாளர் பி. செல்வராஜ் தெரிவித்தார். திறமை மிக்க வீராங்கனைகள் பந்தய மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதற்காக இந்த பயிற்சிகள் உதவும் என்றார். ஆண்டுதோறும் இந்த பந்தயத்தில் பங்கேற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் மோட்டார் பந்தயங்கள் முக்கியத்துவம் பெறுவதைக் கருத்தில் கொண்டே இந்த அகாடமி தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 15 பெண்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். நான்கு சுற்றுகளை இவர்கள் பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள போட்டிக்கு இப்போதே தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டும் போட்டி களை கட்டும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

18 mins ago

கல்வி

11 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

14 mins ago

ஓடிடி களம்

21 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்